சிறுவர்மணி

நல்ல பாதையில் சென்றிடனும்

24th Sep 2023 06:21 PM | புல்லரம்பாக்கம் ஏ.மூர்த்தி

ADVERTISEMENT


நீ புன்னகை வாசம் வீசிடனும்
அனைவரிடமும் அன்பாய் பேசிடனும்
நல்ல செயல்கள் பல செய்திடனும்
நாளும் நல்ல பாதையில் சென்றிடனும்

பிறர் தவறை சுட்டிக் காட்டிடனும்
வாய்மையை என்றும் கடைப்பிடிக்கனும்
கல்வியில் சிறந்து விளங்கிடனும்
ஆசிரியருக்கு கீழ்ப்படிந்து நடக்கனும்

பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்திடனும்
லட்சியப் பாதையில் பயணிக்கனும்
நாட்டின் பெருமையை உயர்த்திடனும்
சாதனையாளராய் நீ புகழ்பெறனும்...!

ADVERTISEMENT
ADVERTISEMENT