கறுப்பு இல்லாத காக்கையை பார்க்க முடியாது. அதுபோல், உடம்பில் புள்ளி இல்லாத ஒட்டகச் சிவிங்கியைப் பார்ப்பது அரிது. புள்ளி இல்லாத ஒட்டகச் சிவிங்கி ஒன்று அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள ஒரு உயிரினப் பூங்காவில் அண்மையில் பிறந்தது. இதற்கு முன்னர் 1972-இல் டோக்கியோவில் இப்படிப்பட்ட ஒட்டகச் சிவிங்கி பிறந்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த "லஸவ் காவ்' என்ற ஊரின் வெங்காய மார்க்கெட்டில் பெரிய வெங்காய உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய வெங்காய மார்க்கெட் இது.
நமது உடல் 30 நிமிடங்களில் உருவாக்கும் வெப்பத்தைக் கொண்டு அரை கேலன் தண்ணீரை கொதிக்க வைக்க முடியும்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 100 பில்லியன் ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன்படி, 92 மில்லியன் டன் துணிகள் எறியப்படுகின்றன.
1950-ஆம் ஆண்டில் இருந்து 2014-ஆம் ஆண்டு ஜூன் வரை வாழ்ந்த இசைக்கலைஞர்களின் ஆயுள்காலத்தை ஆய்ந்தபோது, அவரவர் நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தைவிட இசைக்கலைஞர்கள் 25 ஆண்டுகள் குறைவாகவே வாழ்வது தெரியவந்துள்ளது.
புவி வெப்பமயமாவதால் உலகின் பனி (ஐஸ்) ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டன் குறைந்துவருகிறது.