சிறுவர்மணி

சின்னஞ்சிறு வயதில்..!

10th Sep 2023 12:00 AM | -மதுராந்தகம் குமார்

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி. பொறியாளர் எஸ்.சண்முகம் - பரதநாட்டியக் கலைஞர் எஸ்.ரேகா தம்பதியின் மகன் எஸ்.லோக்ஷிவ், இளம்வயதிலேயே பன்முகத் தன்மையைப் பெற்றுள்ளார்.

"சீடு அகாதெமி'  என்ற கல்விநிறுவனத்தில் 5-ஆம் வகுப்பு படிக்கும் அவரிடம் பேசியபோது:

""நீச்சல், ஓவியம், கர்நாடக இசையில் பாட்டு பயிற்சி,  நாடக நடிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கற்று வருகிறேன். 

ADVERTISEMENT

இதுவரை வரைந்த வண்ண ஓவியங்களைப் பள்ளி விழாக்களின்போது,  ஓவியக் காட்சியை நடத்தி வருகிறேன். 

எனது சகோதரி லத்திகாவுடன் விழாக்களில் ஓரிரு பாடல்களைப் பாடுவேன், 
"ஸ்பெல் பெல்',  "நேஷனல் சயின்ஸ் ஒலிம்பியார்டு' உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பங்கேற்று,   இன்டர்நேஷனல் ஆங்கிலம்,  கணக்கு, பொது அறிவு  ஆகிய பிரிவுகளில்  முதல் பரிசுக்கான சான்றிதழ்களையும்,  பதக்கங்களையும் பெற்றுள்ளேன்.

பள்ளித் தேர்வுகளில் சிறப்பிடத்தைப் பெறுகிறேன்.   ஐ.ஏ.எஸ்.  தேர்வு எழுதி,  நேர்மையான அலுவலராகப் பணியாற்ற வேண்டும் என்பதே ஆசை.

அப்துல் கலாம்தான் எனது ரோல் மாடல்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT