சிறுவர்மணி

தோட்ட உலா

10th Sep 2023 12:00 AM | எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

ADVERTISEMENT

 

வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டு உலவிப் பாருங்கள்!
பூத்த மலரின் புன்னகை ஒளியில் அதில் பூரிப் படையுங்கள்!

பசுமை வண்ணம் பலவாய்த் தோன்றும் புதுமைக் காணுங்கள்!- அவை
விசும்பை நோக்கிச் சுடரை வேண்டும் உணர்வை இரசியுங்கள்!

எவரும் செய்யா வடிவில் பூக்கள் இனிக்கக் காணுங்கள்! - நம்மைக்
கவரும் வகையில் கோல நிறத்துக் கலவை காணுங்கள்!

ADVERTISEMENT

குட்டிக் குருவி பட்டு வண்டு குலவப் பாருங்கள்!- அவை
மெட்டு போட்ட மெல்லி சையில் மொழிவது கேளுங்கள்!

துளிரும் மலரும் ஒன்றை ஒன்று துதித்தல் காணுங்கள்!- அவை
களிப்பில் ஆழ்ந்து காற்றில் ஆடப் படமாய்ப் பிடியுங்கள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT