காந்தி தந்த சுதந்திரம்
காத்து நிற்றல் வேண்டும்! அதைக்
காத்து நிற்கும் காவலன்
கண்ணா நீயே அறியணும்!
நாட்டின் மீதும் நமக்கு
நிறைந்த பற்றும் இருக்கணும் காந்தி
காட்டும் வாழ்வை நன்கு
கற்று நாளும் நடக்கணும்!
அன்பு, நேர்மை, உண்மை,
ஒழுக்கம், தவறா உள்ளம்
என்றும் எவரும் சோதரர்
எவர்க்கும் தீமை எண்ணாமை!
ADVERTISEMENT
நாளும் தீயன நாடாமை
நன்றாய் இவற்றை நீ பழகின்
நாளை நீயும் நாடாள்வாய்
நமது விடுதலைக் காவலனாய்!