சிறுவர்மணி

விடுகதைகள்

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

 


1. போடாத சட்டையை கழற்றிப் போடுவான்.  மந்திரவாதி அல்ல!
2. அடித்தால் அழுது ஆனந்தம் தருவான். அவன் யார்?
3. வேரில்லை முளைத்திருக்கு... இலையில்லை கிளையிருக்கு!
4. கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்... இது என்ன?
5. ஒரு நெல் குத்தினால் வீடெல்லாம் உமி.
6. கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும்.
7. உயர்ந்த வீட்டில் இருக்கும் ஊரார் தாகம் தீர்க்கும்.
8.  காட்டுக்குச் சென்றால் கலகலப்பாய் உழைப்பான்.  வீட்டுக்கு வந்தால் படுத்து உறங்குவான்.
9. வரிக்குதிரை ஓடியது.  வாய்ப்பாட்டு பாடியது.

 

விடைகள்:

ADVERTISEMENT


1. பாம்பு, 2. மத்தளம், 3. மான் கொம்பு, 4. தலையில் பேன்கள் 5.  விளக்கு, 6.  வேர்க்கடலை, 7. மழை நீர், 8. கோடரி, 9. இசைத்தட்டு
 

ADVERTISEMENT
ADVERTISEMENT