தம்பி வா
காகத்தைப் பார்!
பழகும் பண்பை அறி
உறவுகளுடன் பகிர்ந்தே உண்க!
தம்பி வா
கிளியைப் பார்!
நல்ல சொல்லே பேசப் பயிற்று
நல்லதே நாடுவாய்!
தம்பி வா
குயிலைப் பார்
குரலைச் சரிசெய் பாடப் பழகு
மக்களை மகிழ்விப்பாய்
தம்பி வா
எறும்புகளைப் பார்!
உழைப்பை அறி
சேமிக்க கற்றுக் கொள்!
தம்பி வா
நாயைப் பார்!
பழகும் விசுவாசத்தை
கற்றுக் கொள் நன்றியை உணர்வாய்
தம்பி வா
குதிரையைப் பார்
படுத்தறியாதது, ஓடப்பயின்று
ஒலிம்பிக்கில்
தங்கத்தை வெல்வாய்!