சிறுவர்மணி

ஓட்டகக் குட்டி

4th Jun 2023 12:00 AM | -ஆர்.சுந்தரராஜன்

ADVERTISEMENT

 

அந்த ஒட்டகக்குட்டி தன் தாயிடம், ""அம்மா.  எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?'' என்று கேட்டது.
இதற்கு தாய் ஒட்டகம், ""மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடும் தொலைவு நடக்க நீர் போறாமல் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாகச் செயல்படுகிறது!'' என்றது.
ஒட்டகக் குட்டியோ ,  ""அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?'' என்றது.
தாயும், ""மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் நடக்கவேண்டுமல்லவா? மணலில் நடக்க ஏதுவாக நமது கால்கள் அப்படி அமைந்துள்ளன!'' என்றது.
ஒட்டகக்குட்டி மீண்டும், ""அம்மா, நமது கண் பீலிகள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன? சில நேரம் எனது பார்வையை மறைக்கிறது.'' என்றது.
தாய் சொன்னது, ""நாம் பாலைவனத்தில் நடக்கும்போது, வெப்பக்காற்றிலும், மணற்புழுதியிலும் நமது விழிகளை பாதுகாக்க இவ்வாறு அமைந்துள்ளது!'' என்றது.
ஒட்டகக் குட்டி மீண்டும் விடாமல், ""அப்படி என்றால், நாம் பாலைவனத்தில் இல்லாமல், இங்கே மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்!'' என்றது. தாய் ஓட்டகத்துக்கு பதில் தெரியவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT