சிறுவர்மணி

வெயிலை வென்றிடுவீர்!

4th Jun 2023 12:00 AM | -நா.கிருஷ்ணமூர்த்தி

ADVERTISEMENT

 

கோடை வெயில் வந்ததே
கூடவே விடுமுறையும் தொடர்ந்ததே!
வெயிலினுள் அலைவதைத் தவிர்த்துடுவீர்

வீட்டினுள் இருந்தே விளையாடிடுவீர்!
விடுகதை புதிர்கள் போட்டிடுவீர்
கதைகள் சொல்லி களித்திடுவீர்!

கையெழுத்து எழுதி பழகிடுவீர்
பிழையின்றி எழுதப் பயின்றிடுவீர்!
வெயிலின் தாக்கம் தணிந்திடவே

ADVERTISEMENT

வேனல் வியாதிகளைத் தவிர்த்திடவே
வெள்ளரி பிஞ்சுகளை வென்றிடுவீர்!
இளநீர் விரும்பிப் பருகுடுவீர்

தர்பூஸ் கிர்னி தின்றிடுவீர்!
பனை நுங்குகள் சுவைத்திடுவீர்
நீர்மோர் நிறைய அருந்திடுவீர்!

தினமொரு பழச்சாறு பருகிடுவீர்
மண்பானை நீர் குடித்திடுவீர்!
காலையும் மாலையும் குளித்திடுவீர்

உடலில் வியர்வையைப் போக்கிடுவீர்!
பருத்தி ஆடைகளை அணிந்திடுவீர்
பலரும் பாராட்டுவர், மகிழ்ந்திடுவீர்!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT