சிறுவர்மணி

நன்றி உள்ள பிராணி

25th Sep 2022 06:00 AM

ADVERTISEMENT

 

நாய்-  பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.  நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே திரிவதால் "நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது. மனிதர்களுக்குக் காவலாகவும், ஆடு- மாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிநாய்களாகவும்,  கண் பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி உணவாக மனிதர்களால் உள்கொள்ளப்படுகிறது.
நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT