சிறுவர்மணி

நூல் புதிது

DIN


குழந்தைகளுக்கு காந்தி- சூ.குழந்தைசாமி;  பக். 40; ரூ.15; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை- 18.

காந்திய மாமணி டி.டி.திருமலையின் 29-ஆவது நினைவுத் தினமான ஆக. 11-இல் இந்த நூல் வெளியிடப்பட்டது. 

காந்தி எனும் மனிதன் மகாத்மாவாகப் பரிணமித்த வரலாறு,  அவரது சிந்தனைகள் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது சிறப்பு.  
அமைதி, ஒற்றுமை உலகில் நிலைக்க சத்தியம்- அஹிம்சை வழி அவசியம் என்ற காந்தியின் கொள்கை எதிர்வரும் இளைய தலைமுறையினரும் அறிய இந்தச் சிறிய நூலை வாசித்தாலே போதும். ஒவ்வொரு நாளும் அமைதிக்கான சிறு பணியை மேற்கொள்ளுங்கள்- முதலில் மாற்றம் நம்மிடமே என்ற காந்தியின் சிந்தனைகள் அளப்பரியது.

தியானம், குட்டிச் சத்தியாகிரகம், தற்சார்பு, பணிவு, தன்னடக்கம், வீரம் ஆகிய 6 குட்டிக் கட்டளைகள் குழந்தைகள் ஏற்க வேண்டும் என்ற உறுதிமொழி அட்டையின் கடைசிப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது சிறப்புடையது. 

இந்த நூலை படித்தால் குழந்தைகளுக்குப் படைப்பாற்றல், புத்துணர்வு, சுயச் சிந்தனை,  ஆளுமை உள்பட திறன்கள் வெளிக்கொணரும் என்பது உண்மை.

----------------------

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை- மு.முருகேஷ்; பக். 102; ரூ.120;  அகநி  வெளியீடு, வந்தவாசி; 98426- 37637.

குழந்தைகளுக்கான பல நூல்களை வெளியிட்டுள்ள நூலாசிரியர்,  16 கதைகளைச் சிந்திக்க வைக்கும் வகையில் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு நல்லறிவு, தன்னம்பிக்கை என்ற நற்குணங்களைக் கற்கும் அளவுக்குக் கதைகள் உள்ளன. பாட்டி வடை சுட்ட கதை எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே கதையை மாறுபட்ட கோணத்தில், நேர்மறை எண்ணங்களை வகுக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது நூலின் சிறப்பு.

தினமும் தனது தாயிடம் கதை கேட்டு தூங்கும் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி,  முயலும், ஆமையும் முட்டைகோஸ் பிரித்துகொள்வது குறித்த கதையை நவீன முறையில் சொல்லும் கதைதான் நூலின் தலைப்பு. 

உண்மை பேசுதல், உழைத்து வாழ்தல், சுய அறிவு தேவை .. என்ற நல்ல எண்ணங்களை இளம்தலைமுறையினருக்கு விளக்கும் வகையில் இருக்கும் இந்த நூல் உள்ளது. இடம்பெற்றுள்ள சித்திரங்களை மாணவர்கள் வரைந்துள்ளது சிறப்பு.

2017-இல் முதல் பதிப்பாக வந்தது, இப்போது மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்த நூலுக்கு 2021-ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. குழந்தைகளின் பிறந்த நாள்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல் இது. கல்வி நிலைய நூலகங்களில் அவசியம் இடம்பெற செய்யலாம். 

----------------------

கணக்கில் புலியா இருங்க...- மெ.மெய்யப்பன்; பக். 152; ரூ.95; பிரியா நிலையம், சென்னை- 14; 9444218313.

மூளைக்கு வேலை என்று 57 தலைப்புகளில் எளிய முறையில் கணக்கையும், புதிர்களையும் அறியலாம். ஓய்வு நேரத்தில் குழந்தைகள் இந்த நூலை வாசிக்கும்போது, தன்னம்பிக்கை, மனதை ஒருமுகப்படுத்துதல், நல்ல சிந்தனை, ஆளுமைத் திறன் மேம்பாடு போன்ற பல நற்குணங்கள் பெற வாய்ப்புண்டு. இதுதவிர, தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வைக்கவும் எளிய முறையில் சிந்தித்து விடையளிக்கும் வகையில், பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கல்விக்கு மட்டுமல்ல, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் அவசியமும் விளக்கப்பட்டுள்ளது. எளிய மருத்துவ விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.
கணக்குகளைப் போல வாழ்க்கைப் பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே நூலில் இடம்பெற்றுள்ள கருத்து.  அரிதான நல்ல நூல்.  பல்சுவைப் பெட்டகம்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT