சிறுவர்மணி

என் புத்தகம்

25th Sep 2022 06:00 AM | புலவர் முத்துமுருகன்

ADVERTISEMENT

 

புத்தகம் என் புத்தகம்- நான்
போற்றிக் காக்கும் புத்தகம்
நித்தம் நித்தம் படிக்க அறிவு
நிதியை அளிக்கும் புத்தகம்

ஏழு சீர்கள் கொண்டு- பாட்டு
எழுதப்பட்ட புத்தகம்!
வாழும் நெறிமுறைகளெல்லாம்
வகுத்துக் கூறும் புத்தகம்

அரிய சிறந்த புத்தகம்- அது
அகிலம் புகழும் புத்தகம்
உரிய முறையில் கற்பார் வாழ்வை
உயர்த்தும் திருக்குறள் புத்தகம்

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT