சிறுவர்மணி

மான் குணங்கள்

DIN


மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த சாதுவான வன விலங்கு. இலைதழைகளை உண்டு,  அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்தவை.  ஆஸ்திரேலியா அண்டார்டிக்கா ஆகிய கண்டங்களைத் தவிர, உலகில்  மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. 

புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் உள்பட பல வகைகள் உள்ளன. 

ஆண் மான்கள் அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். பெண் மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். மானின் கொம்புகள், ஆண்டுதோறும் விழுந்து புதிதாக முளைக்கும். முதல் ஆண்டில் கிளை இல்லாமல் இருக்கும். பிறகு ஆண்டுதோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும். மானின் வயது அதிகமாகும்போது கிளைகளும் அதிகமாகும். கொம்பு விழுந்த மான் புதுக்கொம்புகள் முளைக்கும் வரை பிற விலங்குகளின் பார்வையில் படாமல் வனப் பகுதியில் மறைந்தே வாழும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT