சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா: தண்டவாளம் துருப் பிடிக்குமா..?

2nd Oct 2022 06:00 AM | ரொசிட்டோ

ADVERTISEMENT

 

தண்டவாளம் துருப் பிடிக்குமா..?

தண்டவாளம்  துருப் பிடிக்கும் அன்பரே! மற்ற இரும்புக் கலவையைவிட தண்டவாளத்தின் இரும்புக் கலவை துருப் பிடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம். கார்பன்,  சிலிகான், மாங்கனீசு, பாஸ்பரஸ்,  சல்பர், தேனிரும்பு உள்ளிட்டவை 1,700 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்டு உருக்கி தண்டவாள இரும்பு செய்யப்படுகிறது.

கார்பன் அதிகரிப்பால், தண்டவாளத்தின் கடினத்தன்மை அதிகரித்து இது வெப்பத்தில் விரிவடையும் இயல்பில் நெகிழ்வுத் தன்மை குறைவதே அதன் காரணம்.தண்டவாள இரும்பு துருப் பிடிக்கவில்லை என்று தாங்கள் நினைக்கக் காரணம், அதன் மேற்பகுதியின் பளபளப்பு மட்டுமே!   அதன் பளபளப்புக்குக் காரணம் அடிக்கடி பயன்படுத்தப்படுவது ஆகும்!

ADVERTISEMENT

இரும்பானது துருப் பிடிக்க அதன் மீதான உயிர்வளியின் (ஆக்சிசன்) வேதிவினை நிகழவேண்டும்.  இப்படி அடிக்கடி பயன்படுத்தப்பட்டால் அந்த வேதிவினை தடுக்கப்பட்டு துருப் பிடித்தல் தவிர்க்கப்படுகிறது.

இரும்பு துருப் பிடித்தல் என்பது இரும்பு கெட்டுப் போவதல்ல. மாறாக,  இரும்பானது இயற்கையோடு இணைய முற்படுவதாகும். அதற்கு உயிர் வளியுடன் உதவுகிறது  அவ்வளவே!

ADVERTISEMENT
ADVERTISEMENT