சிறுவர்மணி

புவியை 908 நாள்கள் சுற்றிய ஆளில்லாத விண்வெளி விமானம்!

27th Nov 2022 06:00 AM

ADVERTISEMENT


விண்வெளியில் நீண்ட நாள்கள் பயணிக்கும் பிரத்யேக விமானங்களைத் தயாரித்து சோதனை செய்து வருகிறது பல அமெரிக்க நிறுவனங்கள்.

விண்வெளியில் மனிதர்கள் வாழவைக்கும் லட்சியத்தில் பங்களிப்பு செய்ய, பிரபல ‘போயிங்' நிறுவனம் விமான ஒட்டி இல்லாமல் இயங்கும் விண்வெளி விமானம் எக்ஸ் 37-ஐ வடிவமைத்துள்ளது. இந்த ஆளில்லாத விமானம் விண்வெளியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் ஏவப்பட்டு பூமியின் நீள் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

சமீபத்தில் , போயிங் நிறுவன விஞ்ஞானிகள். அந்த ஆளில்லா விமானத்தை இயக்கி மீண்டும் வெற்றிகரமாக தரை இறக்கி உள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனையாகக் கருதப்படும் இந்த முயற்சியைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளியில் நீண்ட நாள்கள் தங்க வைக்கும் முயற்சிதொடங்கும்!

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT