சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா: பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத உயிரினம் உள்ளதா?

27th Nov 2022 06:00 AM | ரொசிட்டா

ADVERTISEMENT


பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத உயிரினம் உள்ளதா?

ஒருசில மீன் இனங்கள் தூங்காது என்பர். பொதுவாக,  உறங்குவதற்கு என கண்களுக்கு இமைகள் இருக்க வேண்டும். ஆனால் மீன் இனங்களில் 99% இனங்களுக்கு இமைகள் இல்லை. இதனால் அவை பெரும்பாலும் நீந்தியபடியே இருக்கின்றன.

சில மீன்கள், தமது தொடர் நீந்தும் தன்மையால் சோர்வடையும்போது,  நீருக்கு அடியில் உள்ள சிறுசிறு கல் இடுக்குகளுக்கு அடியில் சென்று கீழ்ப்புறமாக படுத்தபடி ஓய்வெடுக்கும்.

ஓய்வெடுப்பது என்பது உறங்குவது போல் அல்ல. சும்மா படுத்திருக்கும். அதனால் உடல் அசதியை சரிசெய்து கொண்டு மீண்டும் நீந்தும்.

ADVERTISEMENT

முக்கியமான ஒன்று, மீன்கள் உறங்காதவை. ஆனால், பெரும்பாலான மீன்கள் ஓய்வெடுக்கும். இந்த ஒய்வும், மனிதர்கள் உறங்குவதால் அவர்கள் உடலிலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தைப் போலவே மீன்களின் உடலிலில் ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றத்துக்காகத்தான். இதனடிப்படையில் பார்த்தால் மீன்கள் உறங்காத உயிரினங்கள்தான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT