சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா: விமானங்களின் ஜன்னல்களின் நான்கு மூலைகளும்  ஏன் வட்ட வடிவமாக அமைக்கப்படுகிறது?

ரொசிட்டா


விமானங்களின் ஜன்னல்களின் நான்கு மூலைகளும்  ஏன் வட்ட வடிவமாக அமைக்கப்படுகிறது?

சதுர வடிவ ஜன்னல்களின் நான்கு முனைகளும் கூர்மையாக அமைந்து விடுகிறது. ஆனால், முனைகள் கூர்மையாக இல்லாமல் வட்டமாக அமைக்கும்போது அதைத் துடைப்பதற்குக்கூட எளிதாக அமைந்துவிடும். 

இதுதான் முதன்மையான காரணம். மேலும், பொதுவாக கூர்மையான முனைகள் அதிகப்படியான அழுத்தத்துக்கு உள்ளாகும்.

அதனால் அவை நாளடைவில் வலுவிழந்து விடக்கூடும்.

விமானம் பறந்து கொண்டிருக்கும்போதே ஜன்னல் உடையக் கூடிய அல்லது அவற்றில் விரிசல் விழக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.  ஏனெனில் விமானத்தைச் சுற்றி வெளிக்காற்றின் அழுத்தம் மிகமிக அதிகமாக இருக்கும்.

இதுபோன்ற வளைந்த அல்லது வட்ட வடிவ ஜன்னல்களில் காற்று மோதும்போது அது ஓரிடத்தில் குவிக்கப்படாமல் பல்வேறு இடங்களுக்கு அது கடத்தப்படும். அதனால்தான் விமான ஜன்னல்கள் வட்டவடிவில் அமைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT