சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

ரொசிட்டா

கால எந்திரம் என்பது உண்மையா? அதில் பயணித்து கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் செல்வதுபோல திரைப்படங்களிலும் கதைகளிலும் படிக்கிறோமே? இது உண்மையில் சாத்தியமா?

கால எந்திரத்தை மையமாகக் கொண்டு நிறைய கதைகள், திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.

அவையெல்லாம் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததுடன், நாமும் அதுபோல, இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சென்று வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நமது ஆசைக் கதவுகளை அகலத் திறந்து விடவும் செய்திருக்கின்றன.

உலகமெங்கும் பல விஞ்ஞானிகள் இந்த வகை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, கால எந்திரத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், கதைகளிலும் திரைப்படங்களிலும் நிகழ்ந்ததுபோல இது சாத்தியமாகுமா என்று இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை.

அதிலும் இறந்த காலத்துக்குச் செல்வது சாத்தியமே இல்லை என்று நிறைய பேர் கருதுகிறார்கள். இப்போது உங்களுக்குப் பத்து வயது என்றால் உங்களது 2-ஆவது வயதுக்கு நீங்கள் கால எந்திரம் மூலம் செல்வது என்பது சாத்தியமில்லையாம். ஏனெனில், கடந்த காலத்தை நீங்கள் முடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறீர்கள் அல்லவா? மீண்டும் அந்தக் காலத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் உங்கள் வயது 2-ஆக இருக்க வேண்டும். ஆனால், 10 வயது ஆன உங்களால் எப்படி 2-ஆவது வயதுக்குச் செல்ல இயலும்? நன்றாக யோசித்துப் பாருங்கள். இதுதான் சிக்கல்.

ஆனால், எதிர்காலத்துக்குச் செல்ல சாத்தியம் இருக்கிறது என்கிறார்கள். அது இனிமேல்தான் நிகழ வேண்டும் அல்லவா?  ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. நீங்கள் உங்களது 10-வது வயதில் கால எந்திரத்தில் பயணம் செய்து 2070-ஆம் ஆண்டிற்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

அதிவேகமாகப் பயணித்தாலும் அதற்கு 5 ஆண்டுகள் ஆகுமாம். அப்படியே நீங்கள் 2070-ஆம் ஆண்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், உங்கள் நண்பர்களின் வயது 60 ஆகியிருக்குமாம். அதாவது அவர்கள் உங்களைவிட மிகவும் வயதானவர்களாக ஆகியிருப்பார்கள்.

இப்படியெல்லாம் பல சிக்கல்கள் இருப்பதால் கதைகளையும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டு கொஞ்ச நேரத்துக்கு ஆச்சரியப்பட்டு, சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். மற்றபடி கால எந்திரம் தயாராகிவிடும்... விரைவில் பயணிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டு நிகழ்காலத்தைத் தொலைத்து விடாதீர்கள். மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT