சிறுவர்மணி

குறள் பாட்டு: நிலையாமை

19th Mar 2022 05:04 PM

ADVERTISEMENT

அறத்துப்பால்   -   அதிகாரம்  34  -   பாடல்  8


குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

 

கூடு கட்டி வாழ்ந்திடும்
பறவை முட்டையிட்டிடும்
முட்டை குஞ்சு ஆனதும்
இரையூட்டிப் பறக்கப் பழக்கிடும்

ADVERTISEMENT

கூட்டை விட்டுப் பறவைகள்
வேறு இடம் பறந்திடும்
அதைப்போலவே தங்கும் உயிர்
உடலை விட்டுப் பறந்திடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

ADVERTISEMENT
ADVERTISEMENT