சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

ரொசிட்டா


நமது முழங்கை தற்செயலாக எதிலாவது இடித்துக் கொண்டால் "ஷாக்' (மின்சார அதிர்ச்சி) அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறதே... இதற்குக் காரணம் என்ன?இந்த உணர்ச்சியை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்.  முழங்கை தற்செயலாக மேஜையின் முனையில் இடித்துவிட்டாலோ, வேறு ஏதாவது கடினமான பொருளின் மீதோ இடித்தாலோ இந்த உணர்வு எல்லோருக்கும் ஏற்படும். இது ஏறக்குறைய "ஷாக்' அடித்தது  போலவே இருக்கும்.

இதற்குக் காரணம் முழங்கையில் இருக்கும் (funny bone)  நகைச்சுவை எலும்பு என்று பலர் கூறுவர். ஆனால், உண்மையில் இப்படியொரு  எலும்பு கிடையாது. முழங்கையின் முனையில் இருக்கும் உல்நார் நரம்பு (ulnar nerve) என்ற நரம்புதான் இதற்குக் காரணம். இது உடம்பின் பல பகுதிகளை இணைக்கும் மிக நீண்ட நரம்பாகும். இது முழங்கையில் இருக்கும் எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. முழங்கையில் இந்த எலும்பு மிகவும் மெல்லிய தோல் மற்றும் கொழுப்பு குறைவான பகுதியில் உள்ளதால், இது எளிதில் பாதிக்கப்படுகிறது. இதனால்தான் "ஷாக்' அடிக்கும் உணர்வு ஏற்படுகிறதே தவிர, இதனால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே பயப்பட வேண்டாம். இதனால்தான் இந்த எலும்பை நகைச்சுவை எலும்பு என்று அழைக்கிறார்கள் போலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 60,519 பக்தா்கள் தரிசனம்

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயில் தேரோட்டம்

போ்ணாம்பட்டு ஒன்றிய பாஜக கூண்டோடு கலைப்பு

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT