சிறுவர்மணி

நிலவே... நிலவே!

31st Jul 2022 06:00 AM | கடம்பை அறிவு

ADVERTISEMENT

 

பிறை நிலவைப் பாருங்க
பிறந்து மெல்ல வளருது
உறை விடமாம் வானிலே
ஊர் அறிய நகருது!

பாதி நிலவைப் பாருங்க
பார்த்து நம்மைச் சிரிக்குது
மீதி நிலவைத் தேடியோ
மேகம் எங்கும் நடக்குது?

வட்ட நிலவைப் பாருங்க
வண்ணக் காட்சி மேயுது
பட்டி தொட்டி மகிழவே
பால் முகமாய்க் காயிது!

ADVERTISEMENT

கதிரவனின் ஒளியினைக்
கவர்ந்து நிலவு ஒளிருது
புதிரான பெருவெளியில்
புழங்குகின்ற கோளிது!

நிலவு பூமி பாதையை
நீங்கு கின்ற பொழுதிலே
புலரும் வெளி பிறைகளாய்ப்
புதுமை நிலவும் நிலவிலே!

அம்மா சோறு ஊட்டிட
அழகு நிலா உதவுது
அம்புலியின் நட்பிலே
ஆனந்தமும் பெருகுது!

ADVERTISEMENT
ADVERTISEMENT