சிறுவர்மணி

விடுகதைகள்

3rd Jul 2022 06:00 AM

ADVERTISEMENT


1.நடைக்கு உதாரணம்தான், ஆனாலும் குறுக்கே வந்தால் ஆகாது என்பர் சிலர்...
2.இரண்டு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல... கால்கள் உண்டு மனிதன் அல்ல...
3.அரை சாண் அரசி... அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள்...
4.ஆனை விரும்பும் சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும்...
5.இரவெல்லாம் பூங்காடு, பகலெல்லாம் வெறுங்காடு...
6. உருவத்தில் பெரியவன், ஊருக்குள் உயர்ந்தவன்...
7.உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன்...
8.ஊரெல்லாம் வம்பளப்பான், ஓர் அறையில் அடங்குவான்...
9.எட்டி நின்று பார்ப்பான் பெட்டியில் போட்டுக் கொள்வான்...


விடைகள்


1. பூனை    
2.  சைக்கிள்  
3. வெண்டைக்காய்
4. கரும்பு  
5.  வானம்    
6.  கோயில் கோபுரம்
7.  எறும்பு    
8.  நாக்கு      
9.  கேமரா
 

ADVERTISEMENT
ADVERTISEMENT