1. என் பெயரைக் கேட்பவர் பலர், என்னைப் போட்டு மிதிப்பவர் பலர். நான் யார் பெயரையும் கேட்பதில்லை, எவரையும் மிதிப்பதும் இல்லை. நான் யார்?
2. சின்னக் குகைக்குள்ளே சிவப்புக் கொடி ஆடுது...
3. வெள்ளை வெள்ளை நாற்காலி, மேலும் கீழும் நாற்காலி, நடுவே ஆடுவாள் சிங்காரி...
4. ஆற்றைக் கடக்கும், அக்கரை போகும்... தண்ணீரைக் கலக்காது, தானும் நனையாது...
5. எவருக்கும் தெரியாத பொருள், எல்லையெல்லாம் கடக்கும் பொருள்...
6. ஆயிரம் வீரர்கள் அணிவகுத்துச் சென்றாலும் தூசியோ இரைச்சலோ இராது...
7. ஒருவன் உருவம் வளர வளர, உன்றன் பார்வை குறையக் குறைய...
8. வீடு வந்து சேர்ந்தாலும் வெளியிலேயே நின்றிடுவான்..
விடைகள்
1. தெரு
2. நாக்கு
3. பற்கள், நாக்கு
4. குரல்
5. காற்று
6. எறும்புக்கூட்டம்
7. இருள்
8. செருப்பு
ADVERTISEMENT