திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒருமுறை ஒரு சொற்பொழிவு செய்தார். அது முடிந்தவுடன் அதைக் கேட்ட ஒருவர், வாரியாரிடம் சென்று ""சுவாமி, தாங்கள் எந்தத் தலைப்பிலே பேசச் சொன்னாலும் தயக்கமின்றி உடனே பேசிவிடுகிறீர்களே... அது எப்படி?'' என்று கேட்டார்.
அதற்கு வாரியார் சுவாமிகள், அமைதியாக தமது தலைப்பகுதியில் (நெற்றிப் பொட்டில்) விரலைச் சுட்டிக்காட்டி, ""தண்ணீர்த் தொட்டியில் நீரை முழுமையாக நிரப்பி வைத்தால் வீட்டில் எந்தக் குழாயைத் திறந்தாலும் தண்ணீர் வருவது இயல்புதானே! அதுபோல நல்ல நூல்களை, புதிய செய்திகளை, பாடல்களை எல்லாம் சேகரித்து மூளையில் நிரப்பிக் கொள்கிறவர்கள் எப்போதும், எத்தலைப்பிலும் பேசலாம்'' என்றார்.
கேட்டவரோ வாயடைத்துப் போய் நின்றார்.
ADVERTISEMENT