சிறுவர்மணி

பாப்பாவின் பாடம்!

29th Jan 2022 10:00 AM | - கிருங்கை சேதுபதி

ADVERTISEMENT


சேட்டை பண்ணிச் சிரிப்புக்
     கூட்டும் சின்னப் பாப்பா;
செல்லமாகக் குறும்பு பண்ணிச்
     சிரிக்கும் பாப்பா!

பாட்டைப் பாடி ஆட்டம் 
    போடும் தங்கப் பாப்பா;
பள்ளிக்கூடம் போகத் துள்ளும்
     பட்டுப் பாப்பா!

தோட்டச் செடியின் பூவைப் 
    பார்த்து வரையும் பாப்பா;
தோகைமயில் வண்ணம் தீட்டும்
     குட்டிப் பாப்பா!

கூட்டி வைத்துப் பொம்மைகளைப்
     பிள்ளைகள் ஆக்கி
வீட்டுச் சுவரில் பாடம் எழுதி
    நடத்தும் பாப்பா!

ADVERTISEMENT

Tags : siruvarmani
ADVERTISEMENT
ADVERTISEMENT