பட்டாம்பூச்சி பாரேன்!
வட்டமிட்டுப் பறக்குது!
தொட்டுவிடப் போனால்
விட்டு விலகி ஓடுது!
கண்ணைப் பறிக்கும் வண்ணமாய்
ரெண்டு இறக்கை இருக்குது!
மண்ணைப் பிசைந்த மாதிரி
நடுவில் உடம்பு இருக்குது!
பூவில் தேனைத் தேடித்தேடித்
தாவித் தாவி அமருது!
தேனை நிறையக் குடித்துவிட்டு
பூவின் மீதே உறங்குது!
கவலை ஒன்றும் இல்லை!
கடினம் ஏதும் இல்லை!
பட்டாம்பூச்சி போல வாழ்ந்தால்
நமக்கும் உண்டோ தொல்லை?
ADVERTISEMENT