சிறுவர்மணி

விடுகதைகள் (1/1/2022)

1st Jan 2022 08:15 PM

ADVERTISEMENT

1. குதிரை தாவித் தாவி முன்னே போகுது, பின்னே அதோட வால் குறைந்து கொண்டே போகுது...
 2. பல்லைப் பிடித்து அழுத்தினால், பதறிப் பதறி அழுகிறான்...
 3. கன்னங்கரிய நிறம் அதுவாம், கல்வி பரவ உதவுவதாம்...
 4. வெள்ளை வெள்ளைச் சீமாட்டியாம், விளக்கு எரியுதாம் தலைக்கு மேலே...
 5. நிலமோ வெள்ளை, விதையோ கருப்பு...
 6. வெள்ளை வீட்டுக்கு எல்லாப் பக்கமும் கூரை, கதவும் இல்லை, காவலும் இல்லை...
 7. வாலைப் பிடித்து இழுக்க இழுக்க, வளர்ந்து கொண்டே போகிறான்....
 8. வெள்ளை வெள்ளை பாத்திரம், மூடியில்லாத பாத்திரம்...
 விடைகள்
 1. ஊசியும் நூலும் 2. ஆர்மோனியம்
 3. மை 4. மெழுகுவர்த்தி
 5. காகிதம், மை 6. முட்டை
 7. நூல்கண்டு 8. முட்டை

ADVERTISEMENT
ADVERTISEMENT