சிறுவர்மணி

புகழ்

1st Jan 2022 08:12 PM

ADVERTISEMENT

அறத்துப்பால் - அதிகாரம் 24 - பாடல் 8
 வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
 எச்சம் பெறாஅ விடின்.
 - திருக்குறள்
 மறைந்த பின்னர் உலகிலே
 மறைந்திடாமல் நிற்பது
 உயர்ந்த புகழ் ஒன்றுதான்
 உணர வேண்டும் வாழ்விலே
 
 இசையில்லாமல் வாழ்வது
 வசைகள் பெற்ற வாழ்க்கையே
 உலகம் போற்றும் செயல்களைச்
 செய்து புகழ் நாட்டிடு.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT