சிறுவர்மணி

அஸ்திவாரக் கல்!

1st Jan 2022 08:13 PM

ADVERTISEMENT

நினைவுச் சுடர் !
 லால்பகதூர் சாஸ்திரி பத்திரிகைகளில் தனது பெயர் வருவதையும், மக்கள் தன்னைப் புகழ்வதையும் விரும்பாதவர். ஒருமுறை அவருடைய நண்பர்கள் சிலர் அவரிடம், "பத்திரிகைகளில் தங்கள் பெயர் வருவதை நீங்கள் ஏன் விரும்புவதில்லை?' என்று கேட்டனர்.
 அதற்கு அவர், ""தாஜ்மகாலில் இரண்டு வகையான கற்கள் இருக்கின்றன. ஒன்று பளபளக்கும் சலவைக்கல்; மற்றொன்று அதன் அஸ்திவாரக்கல். பளபளக்கும் சலவைக் கற்களே காண்பவரைக் கவர்கின்றன. அஸ்திவாரக் கற்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. யாருடைய பாராட்டையும் பெறுவதில்லை. நான் அஸ்திவாரக் கல்லாகவே இருக்க விரும்புகிறேன்'' என்றார்.
 -என். நஜீமா பேகம்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT