சிறுவர்மணி

 அங்கிள் ஆன்டெனா: கடலிலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்ன?

ரொசிட்டா


கடலிலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்ன?

இதற்கு  ஒரு எடுத்துக்காட்டு இருந்தால் நன்றாக இருக்கும். அதன்படி,  இப்போது நீங்கள் இருக்கின்றீர்கள்.

உங்கள் தலையில் ஒரு சிறிய கல்லைத் தூக்கி வைத்தால் என்ன ஆகும்?  ஒன்றும் ஆகாது. அடுத்ததாக மேலும் 10 கற்களைத் தூக்கி வைக்கிறோம். என்ன ஆகும்?

கொஞ்சம் வலிலிக்கும். மேலும் 100 கற்களைத் தூக்கி வைக்கிறோம்.  என்ன ஆகும்?  அதனால் ஏற்படும் அழுத்தத்தை நம்மால் தாங்க முடியாதுதானே?

இதற்குக் காரணம் என்ன? மேலே கற்களைத் தொடர்ந்து அடுக்க அடுக்க அதன் எடை புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு கீழ் நோக்கி அழுத்தும்.

இப்படித் தொடர்ந்து மேலுள்ள பொருளின் எடையா னது அழுத்தமாக அடிப்பரப்புக்குக் கடத்தப்படுகிறது.

கற்களைப் போலவே நீருக்கும் குறிப்பிட்ட அளவு எடை இருக்குமல்லவா? கடலின் ஆழத்துக்குள் செல்லச் செல்ல, மேலே உள்ள நீர்ப்பரப்பின் எடை அதிகமாகிக் கொண்டே செல்லும். இந்த எடை அதிகரிப்பு மூலம் அடிப்பரப்புக்கு அழுத்தம் கடத்தப்படுவதால்தான் கடலின் ஆழத்தில் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT