சிறுவர்மணி

அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்

14th Aug 2022 06:00 AM | சூ. குழந்தைசாமி

ADVERTISEMENT

 

1.அனைத்துப் பணிகளையும் நாம் சமமாய் மதித்துப் போற்றிச் செய்தால் சாதித் தீமை தானே மறையும்.
2.நாம் ஒவ்வொருவரும் சிறிய அளவில் மாறினால், உலகம் பெரிய அளவில் மாறிவிடும். நான் முதலில் மாறுவேன்.
3.உடல்-அறிவு-ஆன்ம இணைப்பின் உன்னதத்தைக் கற்றுத் தருவதையே உண்மையான ஒழுக்கக் கல்வி என ஏற்பேன்.
4.என்னுடைய வழிமுறை தூய்மையற்றிருந்தால் வன்முறையும், தூய்மையுற்றிருந்தால் அமைதியும் விளையும்.
5.தீமையை வெறுக்கலாம்; தீமை செய்தோரை அல்ல. மற்றவரைக் கேவலப்படுத்துவதன் மூலம் மேன்மையைத் தேடமாட்டேன்.
6.சுய மரியாதையையும் மதிப்பையும் இழக்க நேர்வதால், எதையும் இலவசமாகப் பெறமாட்டேன்.
7.உடை, உணவுத் தேவையில் உழைப்பு மூலம் தற்சார்ப்புடன் வாழ எனக்கு வழிவகுப்போருக்கு மட்டுமே வாக்களிப்பேன்.
8.அநீதி அமைதியைக் குலைக்கிறது. நீதி அமைதியை நிலைக்க வைக்கிறது. எனவே, நீதியைத் தேடுவேன். அமைதி தன்னாலே வரும்.
9.மற்றவர்களைப் பார்த்து "அவர்போலச் செய்து' வாழமாட்டேன்.
10.அமைதி வேண்டி, நான் எடுக்கும் முயற்சி அணுவளவேனும், அது பேரண்டத்தின் சிக்கலையும் தீர்க்கும் வல்லமை பெறுகிறது.
11.தீமை, நன்மையைவிடக் கவர்ச்சியாததால், தீமை சூழலிலிருந்து சட்டென்று விலகி ஓடிவிடுவேன்.
12.போர் வேண்டாமெனில், முதலில் என் உள்ளிருக்கும் போர்க் குணத்திலிருந்து மீளுவேன்.
13.நீதியுடன், நீதிக்காக, நீதி வழியில் போராடுவேன். அன்பும் சத்தியமும் தாமாகவே தழைக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT