சிறுவர்மணி

அங்கில் ஆண்டெனா

30th Apr 2022 04:16 PM | ரொசிட்டா

ADVERTISEMENT

பசுக்களால் நீச்சல் அடிக்க முடியுமா?

உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் பல திறமைகளைக் கொடுத்துள்ளான். அது போலத்தான் இதுவும். எருமைகளைப் பார்த்திருப்பீர்கள். நீருக்குள்ளேயே கிடக்கும். ஆனால் பசுக்கள் அப்படியல்ல. தேவைப்பட்டால்தான் நீருக்குள் இறங்கும்.

அதே போல தேவைப்பட்டால் நீரில் நீச்சல் அடிக்கவும் பசுக்களுக்குத் தெரியும். இக்கட்டான நிலை ஏற்படும்போது நாய்கள் நீரில் நீச்சல் அடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோலத்தான் இதுவும். பசுக்கள் நன்றாகவே நீச்சல் அடிக்கும். மனிதர்களுக்குப் பழகினால்தான் நீச்சல் வரும். ஆனால் பசுக்களுக்கு இயற்கையாகவே அந்தத் திறமை இருக்கிறது என்பது உண்மைதான். 


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT