சிறுவர்மணி

செல்லப் பாப்பா

30th Apr 2022 05:24 PM | கடம்பை அறிவு

ADVERTISEMENT

செல்லப் பாப்பா சேட்டைகள்
சீனிமிட்டாய் அல்லவா!
எல்லை இல்லா கூத்துகள் 
எடுத்து இங்கு சொல்லவா?
தொலைக்காட்சி இசையிலே
துள்ளி நெளிந்து ஆடுது!
கலையொழுகும் மொழியிலே 
கனிந்து பேசி ஓடுது!
பொம்மைகளின் நடுவிலே 
புதுக்கதைகள் பேசுது! 
வம்பு பண்ணும் முடிவிலே 
வாரிப் பொருளை வீசுது!
கண்ணாடிமுன் சிரிப்பினைக் 
காட்டி காட்டி நடிக்குது! 
அண்ணனது நூலினை 
ஆ உவெனப் படிக்குது!
தந்தை முதுகு குதிரையாம்
தாவி அமர்ந்து கொள்ளுது! 
விந்தை காட்டும் குரங்கென 
விழுந்து எகிறி செல்லுது!
அழகுப் பாப்பா ஓடியாடி 
அம்மா விடம் கொஞ்சுது! 
பழகும் நிலவு பாட்டுப் பாடி 
பாய் விரிக்கத் துஞ்சுது!

 

ADVERTISEMENT
ADVERTISEMENT