சிறுவர்மணி

அங்கிள் ஆண்டெனா

23rd Apr 2022 05:46 PM | ரொசிட்டா

ADVERTISEMENT

யானைகளுக்கு மட்டும் ஏன் அவ்ளோ பெரிய காதுகள்?

உலகின் மிகப் பெரிய விலங்கினமான யானைக்கு இருக்கும் வித்தியாசமான உறுப்புகள் அதன் தும்பிக்கை, தந்தம், காதுகள்தான். சரி, இந்தக் காதுகள் ஏன் இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? 

சில யானைகளின் காதுகள் 22 அடி நீளம் வரை இருக்கும். இவை அதன் கேட்கும் திறனை அதிகரிப்பதில்லை. எல்லோருக்கும் கேட்பது போலத்தான் அதற்கும் கேட்கும். இந்தக் காதுகளின் சிறப்பம்சம்:  யானையின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்குத்தான் இவ்ளோ பெரிய காதுகள்!

சாதாரணமாக யானைகள் ஆசியா, ஆப்ரிக்கா போன்ற மிகவும் வெப்பமான பிரதேசங்களில் வாழ்கின்றன. யானை இருக்கும் சைசுக்கு (அளவுக்கு) எப்போதும் குளிர் காற்று வீசினால்தான் அதன் உடம்பைக் குளிர்ச்சியாக, வெப்பத்தினால் ஏதும் பாதிப்பு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள முடியும். வெப்பப் பிரதேசங்களில் இந்தச் சலுகை யானைக்குக் கிடைப்பதில்லை. மேலும் நீருக்குள் இறங்கி தண்ணீரை வாரி இறைத்து உடம்பைக் குளிரச் செய்து கொள்ளவும் வெப்பமான இடங்களில் நீர் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.

ADVERTISEMENT

ஒரே வழி, பெரிய விசிறிதான். அந்த விசிறியாகப் பயன்படுகிறது யானையின் காதுகள். அதனால்தான் யானை எப்போதும்  தனது காதுகளை இப்படியும் அப்படியுமாக அசைத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் தனது உடம்பின் வெப்ப நிலையைச் சமன்படுத்திக் கொள்கிறது.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT