சிறுவர்மணி

விடுகதைகள்

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

1.  குட்டி போடும், ஆனால் எட்டிப் பறக்கும்....
2.  இரட்டையர்கள்... ஒருவன் மேலே போனால் ஒருவன் கீழே வருவான்...
3. தாய் சிரிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப்பாள்...
4. வெந்து கரியாகி, விருந்து படைப்பான்...
5. கூடும் வைத்திருப்பான்... வீடும் வைத்திருப்பான்...
6. இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது...
7. ஆழத்தில் புதைந்திருப்பான்,  வெளியே வந்தால் பளிச்சிடுவான்...
8.  பச்சைக் கிளி, பறக்க முடியாத கிளி, கொம்பிலே இருக்கும் குள்ளக் கிளி...
9. காயும் காய்க்கும், பூவும் பூக்கும், கையை நீட்டினால் குத்தியும் கிழிக்கும்...

 

விடைகள்

ADVERTISEMENT

1. வெளவால்    
2. தராசு
3. பால், தயிர், வெண்ணெய்
4. விறகு   
5.  நத்தை   
6.  பட்டாசு
7. முத்து    
8. மாங்காய்    
9. கள்ளிச்செடி

ADVERTISEMENT
ADVERTISEMENT