சிறுவர்மணி

அன்புடைமை

18th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT

 


நல்ல நூல்கள் உலகை அறிய உதவும்!..... மேலும் உன்னை அறியவும் உதவும்! 
- எட்வர்ட் பிரேக்கர்

குப்பைக் கருத்துகளை அலங்காரமாகக் கூறினாலும் அது குப்பைக்குத்தான் போய்ச் சேரும். 
- பெஞ்சமின் ஃபிராங்ளின்

சுவடுகளை விட்டுச் செல்லாதவனின் வாழ்க்கை பின்னோக்கிச் செல்கிறது. 
- ஹெர்சன்

ADVERTISEMENT

முயற்சி என்பது கானல் நீர் அன்று! அது ஆற்றின் கரைக்கே அழைத்துச் செல்லும்! 
- கதே

நிதானம், சகிப்புத்தன்மை, கருணை ஆகியவற்றில் அடங்கியதே விவேகம். 
- ஸரஸ்துரர்

மிக உறுதியான மனிதனைக் கண்டு வேலையே அஞ்சும்! 
- சீனப்பழமொழி

வெற்றிக்காகப் போராடும்போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்! 
- கண்ணதாசன்

உயர்ந்த லட்சியங்களை நோக்கி நடைபோடுபவனை நோக்கி அந்த லட்சியமும் நடைபோடுகிறது! 
- ரூமி

உள்ளம் மலராக இருந்தால் மொழிகளில் இனிய மணம் வீசும்! 
- யாரோ

தனக்குள்ளேயே உறங்கி உறைந்து கிடக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தி, அமைதி, ஆனந்தம், ஞானம் ஆகியவற்றை அடைந்து நிறைவு பெற வகை செய்வதே இம்மனிதப் பிறவி.  
- சத்ய சாய்பாபா
 

Tags : siruvarmani Love
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT