சிறுவர்மணி

வியாசரின் பொன்மொழிகள்

30th Oct 2021 09:10 PM

ADVERTISEMENT


பேராசை வளரத் தொடங்கினால் அறிவாளியும் முட்டாள் ஆவான்.

தேவையற்ற பேச்சால் நேரம் வீணாகும். திட்டமிட்ட செயல்கள் நிறைவேறாது.

தருமம் இருக்குமிடமே தெய்வத்தின் விலாசமாகும்.

தருமத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் மற்ற நல்ல விஷயங்களில் நம்பிக்கை ஏற்படாது.

ADVERTISEMENT

வாழ்க்கைக் கடலை கடக்க உதவும் தோணி தருமம் ஒன்றே.

தருமத்தை முழுமையாக ஏற்று வாழ்வதே கல்வி கற்றதன் அடையாளம்.

புத்தியால் மனதை அடக்கி ஆள்பவன் வெற்றியின் இலக்கை அடைவான்.

கோபத்தைக் கைவிட்ட  மனிதனை துன்பங்கள் நெருங்குவதில்லை.

கடமையில் கவனம் செலுத்துவீர்!.... அதன் பலன்களில் அல்ல.

நல்லெண்ணங்களால் மட்டுமே மனம் வளம் பெற இயலும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT