சிறுவர்மணி

தீபாவளி நாள் பரவசந்தான்!

30th Oct 2021 09:50 PM | - வரத . சண்முக சுந்தர வடிவேலு

ADVERTISEMENT

 

படபட படவென பட்டாசு!
சடசட சடவென சரவெடிதான்!
டமடம டமடம டம் டமால்!
கடகட கடகட வென வெடிச்சிரிப்பு!

பாம்பு வெடிகள் சீறுது பார்!
புஸ் வாணம் பூவாய் சிரிக்குது பார்!
பூவாய்ச் சிரிக்குது மத்தாப்பு!
பம்பரம்போலச் சக்கரங்கள்!

பாதுகாப்பு மிகத் தேவை!
பத்திரமாக வெடித்திடுவாய்!
வாளியில் நீரை நிரப்பிக்கொள்!
காலில் செருப்பைப் போட்டுக்கொள்!

ADVERTISEMENT

தீபா வளிக்குப் புத்தாடை
தீபா அணிந்தாள் சித்தாடை!
நெற்றிச் சுட்டி ஜிமிக்கியுடன் 
நெருங்கிச் சிரித்தாள் என் தங்கை!

தீபா வளிநாள் பரவசந்தான்!
ஜாமூன் லட்டு அதிரசந்தான்!
அல்வா முந்திரி பழக்கேக்கு!
ஆசைத்தம்பி பல கேட்பான்!

ADVERTISEMENT
ADVERTISEMENT