சிறுவர்மணி

விடுகதைகள்

23rd Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


1. சின்னக் குகைக்குள்ளே சிவப்புக்கொடி அசையுது...
2. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான்... வெளியில் வந்தால் விரைவில் மடிவான்...
3. கன்னங்கரிய நிறம், அதுவாம்... கல்வி பரவ உதவுதாம்...
4. வெள்ளை வெள்ளைச் சீமாட்டிக்கு விளக்கு எரியுது தலைக்கு மேலே...
5. நிலமோ வெள்ளை, விதையோ கருப்பு...
6. வெள்ளை வீட்டுக்கு இரண்டு கூரை. கதவும் இல்லை, 
காவலும் இல்லை...
7. அடிக்க அடிக்க அழுதான்... அழுதான்... வழிந்த 
கண்ணீரால் வாளி நிறைந்தது...
8. வெள்ளை வெள்ளைப் பாத்திரம்; மூடியில்லாத பாத்திரம்...


விடைகள்

1. நாக்கு
2. மீன்
3. மை   
4. மெழுகுவர்த்தி
5.  தாள், மை    
6.  முட்டை
7.  அடிபம்பு
8.  முட்டை
 

ADVERTISEMENT
ADVERTISEMENT