சிறுவர்மணி

பொன்மொழிகள்!

16th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


அறிவை முதலீடாக வைத்து அரண்மனையை வாங்கலாம். ஆசையை முதலீடாக வைத்தால் துன்பத்தைத்தான் வாங்க முடியும். 
- விவேகானந்தர்

நமது நன்மையைப் பெற நாம் தவறிவிட்டாலும் பிறர் பெறப்போகும் நன்மைக்காக உதவுவதே மனிதத் தன்மையாகும்.  
- ஜார்ஜ் எலியட்

சான்றோராவதற்கு அறிவில் தெளிவு, உயர்ந்த புத்தி, சீரிய சிந்தனை, புதிய கருத்தைக் கேட்கும் மனப்பான்மை, நினைவாற்றல் ஆகியவை தேவை. 
- ரூசோ

தேவைகளை குறைத்துக்கொண்டு போகும்போது தெய்வத்தன்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 
- சாக்ரடீஸ்

ADVERTISEMENT

முயற்சியைக் கைக்கொள்பவனின் உடலில் சக்தி பாய்ந்து வருகிறது. 
- எமர்சன்

காலத்தை வீணாக்காதவன் வறுமையைத் துரத்திவிடுகிறான். 
- இங்கர்சால்

நம் குறைகளை நாமே அடையாளம் காண்பதுதான் வளர்ச்சியின் அடையாளம். 
- யாரோ

தவறு நேர்ந்துவிடுமே எனத் தயங்காதே. தவறே செய்யாதவன் முயற்சியே செய்யாதவன் ஆவான். 
- தியோடர் ரூஸ்வெல்ட்

உன்னைவிட  உயர்ந்த சான்றோர்களுடன் நட்பு கொள். 
-கன்ஃபூஷியஸ்

வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களே. 
- அப்துல் கலாம்

Tags : Sayings! siruvvarmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT