சிறுவர்மணி

கருவூலம்: முட்டைகளின்  தாத்தா!

சுமன்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின்போது சீனாவில் வூஹான் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தன் நிலத்தில் பாறை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு பொருளைக் கண்டார். அது முட்டையைப் போன்ற தோற்றத்தில் இருந்தது. அவருக்கு அந்தப் பொருள் அதிசயமாக இருந்தது. அதை அப்படியே எடுத்துக்கொண்டு போய் சீன புவியியல்  ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்துவிட்டார்.

அந்த முட்டையை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் மூழ்கினர். அந்த முட்டையில் கருப் படிமங்கள் இருந்தன. கருவுடன் இருந்த அந்த முட்டைப் படிமம் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்தனர்! (கிரிடோசியஸ் காலம் என அழைப்பர்) முதலில் அந்த முட்டை டைனோசரஸூடையது என எண்ணினர். ஆனால் அதுதான் இல்லை. அது ஒருவர் ஆமையினுடையது!

அதன் ஓடு மிக உறுதியானதாக இருந்தது. அதனால்தான் அந்தக் கருவின் படிமங்கள் அழியாமல் இருந்தன. அந்த முட்டையை இட்ட ஆமை "நாங்சியங்ஷெலியிடே' (NENGSIUNGCHELYIDAE) வகையைச் சார்ந்ததாம்! (ஸ்பெல்லிங்கை பார்த்து என்னாலே அதை உச்சரிக்கவே முடியலே) அந்த வகை ஆமைகள் சுமார் ஐந்தரைஅடி நீளம் இருக்குமாம்! தோற்றத்தில்  பெரிய உருவமாக தற்கால ஆமைகளைப் போன்றே இருக்கும். 

அங்கு ஓடிய பழைமையான ஆற்றின் வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட முட்டையாய் இருக்கும் என ஊகிக்கின்றனர்.

முட்டை பொரிந்து ஆமைக்குஞ்சு வெளியில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை டிஜிட்டல் முறையில் வரைந்திருக்கிறார்கள். 

அந்தப் படம்தான் இது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

SCROLL FOR NEXT