சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி


கேள்வி: சூரிய கடிகாரம் பற்றித் தெரிந்து கொண்டோம். பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது தெரியுமா?

பதில்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் குத்துமதிப்பாக 93 மில்லியன் மைல்கள். ஒளிதான் மிக வேகமாகப் பயணிக்கும் என்று படித்திருப்பீர்கள்.  இந்த ஒளிகூட சூரியனிலிருந்து பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 8 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சரி, நாம் சூரியனை அடைவதற்கு எவ்வளவு நேரம் அல்லது நாள்கள் ஆகும்?

மணிக்கு 550 மைல்கள் வேகத்தில் செல்லும் ஜெட் விமானத்தில் நாம் பயணித்தால் சூரியனைச் சென்றடைய 19 ஆண்டுகள் ஆகும்.

மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் செல்லும் காரில் பயணத்தில் சூரியனை அடைய 177 ஆண்டுகள் ஆகும். அம்மாடியோவ்! அரிஸ்டார்கஸ் என்ற கிரேக்க விஞ்ஞானிதான் முதன்முதலில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட்டார் என்று கூறப்படுகிறது. இவர் கணக்கிட்டுச் சொன்னது கி.மு.250-இல் என்கிறார்கள். 

மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர். இவர் கணக்கிட்டது 1653-ஆம் ஆண்டில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT