சிறுவர்மணி

விடுகதைகள்

20th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT

 

1.  வினா இல்லாத ஒரு விடை...
2. இவன் நின்றால் ஒரு பெயர். இவன் ஓடினால் ஒரு பெயர், விழுந்தால் ஒரு பெயர், யார் இவன்?
3. சூரியனை எந்நேரத்தில் கடந்து சென்றாலும் இவனுடைய நிழல் விழாது. யார் இவன்?
4. இவன் சுற்றச் சுற்ற நமக்கு மகிழ்ச்சி...
5.  உச்சியில் குடியிருப்பவன், கீழே வந்தால் தாகம் தீர்ப்பான்...
6. தலை மட்டுமே உண்டு இவனுக்கு. ஊரெல்லாம் சுற்றுவான், ஆனால் சிறகுகள் இல்லை....
7. பளபளக்கும் வெள்ளிக்கல். கடித்தால் இனிக்கும் கல். இது என்ன கல்?
8. இருட்டு வீட்டுக்குள் குட்டி எருமை மேயுது...

விடைகள்


1.  பணிவிடை 
2. தண்ணீர் - குளம், நதி, அருவி 
3. காற்று  
4. மின்விசிறி
5.  இளநீர்   
6.  தபால் தலை 
7.  கல்கண்டு
8.  பெருச்சாளி

ADVERTISEMENT

Tags : siruvarmani Narratives
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT