சிறுவர்மணி

முயன்றிடுவேன்

20th Nov 2021 06:00 AM | பூதலூர் முத்து

ADVERTISEMENT

 

ஒருநாள் கூடத் தவறாமல்- நான்
ஓடி வருவேன் பள்ளிக்கு!
ஒருநாள் வீட்டில் நின்றாலும் - அது
ஒழுங்கா நல்ல பிள்ளைக்கு?

என்னை வளர்க்க என் பெற்றோர்- தினம்
எல்லை மீறி உழைக்கின்றார்!
அன்பும் பண்பும் தருகின்றார் - நல்
அறிவும் ஒழுங்கும் துணை என்பார்!

என்னை உயர்த்த என் ஆசான் - நல்
இதயத் தோடு உழைக்கின்றார்!
"உன்னால் முடியும்' எனச் சொல்லி -நல்
ஊக்கம் அள்ளித் தருகின்றார்!

ADVERTISEMENT

காலம் என்பது பொன்னாகும் - அதைக்
கண்ணாய்ப் போற்றிச் செயல்படுவேன்!
ஆலம் விதைதான் நான்இன்று - நாளை
ஆயிரம் பேர்க்கு நிழல் தருவேன்!

வீணாய் எதையும் பேசாமல் - நான்
வெற்றியை நோக்கிச் சென்றிடுவேன்!
தானாய் எதுவும் கிடைக்காது - அதனால்
தடைவந் தாலும் முயன்றிடுவேன்!

Tags : siruvarmani I will try
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT