சிறுவர்மணி

கடி

20th Nov 2021 10:00 AM

ADVERTISEMENT

 

டேய்...  நீ ஆவியைப் பாத்திருக்கியாடா..?
ம்... ரெண்டு ஆவி...
ரெண்டு ஆவியா? யாரு... உங்க தாத்தா பாட்டியோட ஆவியா?
இல்லை.. இட்லியோட ஆவி... 
புட்டோட ஆவி...

வண்ணை கணேசன்,
சென்னை. 

 

ADVERTISEMENT

மன்னர்: போரில் தோல்வியை சந்திக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 
தளபதியாரே...?
தளபதி: போரையே சந்திக்காமல் இருப்பதுதான் மன்னா...!

எஸ். கார்த்திக் ஆனந்த்,
திண்டுக்கல்.

 

இந்தாடா... இந்தாடான்னு சொல்றேன்... காதுலயே வாங்க மாட்டேங்கிறயே...
காதுல எப்புடிடா வாங்க முடியும்? 
கையிலதானே வாங்க முடியும்...?

மு. பெரியசாமி,
திருத்துறைப்பூண்டி.

 


பாவம்டா இந்த நண்டு... கால்ல அடிபட்டுருச்சி போல... நொண்டி நொண்டிப் போகுது பாரு...
அப்ப.... அதை "நொண்டு'ன்னு சொல்லு.

கோ. வினோத்,
திருநெல்வேலி.

 

சார்... டீ ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா...?
கடனா வேணும்.

ஏ. பாரூக்,
நெல்லை.

 

டைரக்டர்:  என் படத்தோட பேரு ரொம்ப பயங்கரமானது
நண்பர்:  அப்படி என்ன பேரு?
டைரக்டர்:  நான்தான் சொன்னேனே.... "பயங்கரமானது' என்று...

நாகை பாபு
நாகை மாவட்டம்.

Tags : siruvarmani Bite
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT