சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

5th Nov 2021 11:10 PM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

கேள்வி: கொம்பு உள்ள பன்றி என்று ஒன்று இருக்கிறதாமே, உண்மையா?

பதில்: இருக்கின்றது. இந்த விலங்கை ஆங்கிலத்தில் ஐவரி பிக் என்று அழைப்பார்கள். தமிழில் தந்தப் பன்றி என்று வைத்துக் கொள்ளலாம். இந்தப் பன்றிக்கு நான்கு கொம்புகள் இருக்கும். நினைத்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது அல்லவா? 

ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் இந்த விலங்கு சற்று முரட்டு ஆசாமிதான். இதற்கு மோப்ப சக்தியும் அதிகம். தனது உணவை மோப்பம் பிடித்தபடியே அலையும். சரியான இடத்தில் உணவு இருக்கிறது என்பதைக் கண்டவுடன் அங்கே செல்லும். அதே இடத்துக்கு வாசனை பிடித்துக் கொண்டு வரும் பிற பன்றிகளுடன் பெரிய போராட்டமே நடக்கும். இந்தப் போராட்டம் ஏதோ கானகத்துக்கான அரச பதவிக்கு நடப்பது போல இருக்கும். அவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கும்.

ADVERTISEMENT

சண்டையில் தோற்றுப் போன பன்றிகள் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்குமாம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT