சிறுவர்மணி

 அங்கிள் ஆன்டெனா

29th May 2021 04:26 PM | -ரொசிட்டா

ADVERTISEMENT


கேள்வி: சீல் வைக்க உதவும் அரக்கு எதிலிருந்து தயாரிக்கப் படுகிறது?

பதில்:  அந்தக் காலத்தில் சீல் வைக்க உதவும் அரக்கு, தேன்கூட்டிலிருந்து கிடைக்கும் மெழுகு போன்று ஒரு பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது.

இந்தத் தேன்கூட்டு மெழுகுடன் ஐரோப்பாவில் காணப்படும் லார்ச் என்ற மரத்திலிருந்து கிடைக்கும் மஞ்சள் நிற டர்பன்டைன் போன்ற திரவப் பொருளையும் சேர்த்து ஒரு கலவையாக்கி அரக்கு தயாரிக்கப்பட்டது.

அரக்கைப் பார்த்திருப்பீர்கள். அது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட அரக்கு சிவப்பு நிறத்தில் இருக்கவில்லை. நிறமற்றதாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகுதான் அத்துடன் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டது.

ADVERTISEMENT

16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அரக்கு,  ஷெல்லாக் என்ற ரசாயனப்
பொருள், டர்பன்டைன், பசை, சாக்குப் பொடி (சாக்பீஸ் செய்ய உதவும் பொருள்), 
மற்றும் சிவப்பு நிறம் கலந்து தயாரிக்கப்பட்டது. 

Tags :  அங்கிள் ஆன்டெனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT