சிறுவர்மணி

கருவூலம்

29th May 2021 04:56 PM | - சுமன்

ADVERTISEMENT

 

சிவந்த நிலவு!


2021 - ஆம் ஆண்டு மே மாதம்  26 - ஆம் தேதி சந்திரகிரகணம் நிகழ்ந்தது. இந்த நிலவுக்கு "சூப்பர் பிளட் மூன்' என்று பெயர். நாம் இதை "சிவப்பு நிலவு' என்றே அழைப்போம். நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திர கிரகணம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த வருடம் நிகழ்ந்த இந்த சந்திர கிரகணம் சற்றே சிறப்பு வாய்ந்தது. நிலவு பூமிக்கு சற்று அருகில் வரும்! அது மட்டுமல்ல!.... நிலவு சுமார் ஏழு சதவீதம் பெரியதாகத் தெரிந்தது. மேலும் சுமார் 15 சதவீதம் பிரகாசமாகத் தெரிந்ததாம்! 

இந்த சந்திரகிரகணம் மேற்கு அமெரிக்காவில் அலாஸ்கா, ஹவாய், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்று கிழக்கு ஆசியப் பகுதிகளில் நன்றாகத் தெரிந்ததாம்! சூரிய ஒளிக் கதிர்கள் பூமியில் பட்டு சிதறிய மற்றும் குறுகிய அலைகளே இந்த சிவப்பு நிறத்திற்குக் காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  சிவந்த நிலவு பார்க்க மிக அழகாகத்தான் இருக்கிறது! 

ADVERTISEMENT

 

சிகாடா பூச்சிகள்!

இந்த வருடம் ப்ரூட் -  எக்ஸ் (ஆதஞஞஈ-ல))வகை சிகாடா பூச்சிகள் அமெரிக்காவில் வெளியே வரப்போகுதாம்! அதுவும் லட்சக்கணக்கில்! ஆம்! வட அமெரிக்கப் பகுதிகளில்! அது சரி! அது என்ன சிகாடா பூச்சி?.... சுமார் 13  லிருந்து 17 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே  பூமியின் மேற்பரப்பில் வரும் பூச்சிகள் இவை! உலகெங்கிலும் இந்தப் பூச்சிகள் பிரசித்தமானவைதான்! தற்போது அமெரிக்காவின் நியூயார்க், இல்லினாய்ஸ். வெர்ஜீனியா, நியூஜெர்ஸி, ஓஹியோ, மேரிலாண்ட், வாஷிங்டன் முதலிய 15 நகரங்களில் இவை வெளிப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 

இந்த சிகாடா பூச்சிகளின் வாழ்க்கையே ஒரு சுவாரசியமான கதை!  வளராத இளம் பூச்சிகள் பூமிக்கு அடியில் சுமார் எட்டு அடி ஆழத்தில் வசிக்கும். அதுவும் வெளியில் வராமலே! அது சரி இவைகளுக்கு உணவு? மரங்களின் வேர்களில் கசியும் திரவமே இவைகளுக்கு உணவு!  அமெரிக்காவின் பல பகுதிகளில் 2004 -ஆம் ஆண்டு இவை வெளியே வந்தன. தற்போது இந்த ஆண்டு இவை வெளிவருமாம்! இனப்பெருக்கத்துக்காக இவை வெளியே வரும். 

சிகோடா ஆண் பூச்சிகள் ஒரு வகைப் பாடல்களைப் பாடுமாம்! அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்பூச்சிகள் ஒரே கோரஸாப் பாடுமாம்! அதனால் கவரப்பட்ட பெண் பூச்சிகளோடு சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும்! 
ஆனால் பாவம் இந்தப் பூச்சிகள்! இவை வரும் வேளையை சில பறவைகள், விலங்குகள் நன்றாக அறிந்துகொண்டு இவற்றை வேட்டையாடி உண்ணும்! ஏன் மனிதர்கள் கூட இந்த வகைப் பூச்சிகளை சமைத்து உணவாக உட்கொள்ளுகிறார்களாம்!

பெண்பூச்சிகள் மரங்களின் இலைகளில் முட்டைகளை இடும். ஒரு பெண் சிகாடா பூச்சி சுமார் 600 முட்டைகளை இடும்! அவை இலைகளைப் பற்றிக்கொண்டு வளரும் வரை காத்துக்கொண்டு தன்னைச் சுற்றியிருக்கும் தோல்போன்ற பகுதியிலிருந்து விடுபட்டுக் கீழே விழும்! பிறகு? பிறகு அவை பூமியைத் தோண்டித் தோண்டி பூமிக்குள் சென்று விடும்! இந்தப் பூச்சிகள் விஷமற்றவையாம். மனிதர்களுக்கு எந்தத் தீங்கு இழைக்காதவையாம்! மேலும் இவை நிலத்தைப் பண்படுத்த உதவுகிறது. இயற்கைக்கு நண்பனாக விளங்குகிறதாம் இந்த சிகாடாப் பூச்சி!

 

Tags : கருவூலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT