சிறுவர்மணி

விழிப்பாய் இருக்கணும்!

29th May 2021 05:00 PM | பாவலர் மலரடியான்

ADVERTISEMENT

 


கொரோனா தொற்று மக்களை
கொன்று தவிக்க வைக்குது!
வராமல் தொற்றைத் தடுக்கணும்
வாயை மூடிப் பேசணும்!

தொட்டு தொட்டுப் பேசாமல்
தூர நின்றுப் பேசணும்!
எட்டி விலகி இருக்கணும்
இடை வெளிகள் கொடுக்கணும்!

முகத்தில் கவசம் அணியணும்
மூலிகைக் குடிநீர் பருகணும்!
அகத்தில் சுத்தம் காக்கணும்
அரசு சொல்வதைக் கேட்கணும்!

ADVERTISEMENT

தும்மல் இருமல் வந்தாலும்
துணியால் மூடித் தும்மணும்!
தும்மல் துளிகள் தன்னாலே
தொற்றிப் படரும் கிருமிகள்!

ஓடும் நீரில் கைகளை
ஒப்பாய் சோப்பால் கழுவணும்!
ஆடிப் பாடி சுத்தாமல்
அடங்கி வீட்டில் இருக்கணும்!

நாளும் விழிப்பாய் இருக்கணும்
நலத்தை காக்கப் பழக்கணும்!
மூளும் கொரோனா நோயினை
முற்றும் துரத்தி அடிக்கணும்!

 

Tags : விழிப்பாய் இருக்கணும்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT