சிறுவர்மணி

கதிரவன்!

15th May 2021 04:41 PM

ADVERTISEMENT

 

காலையிலே உதிப்பவன்!
காரிருளை ஒழிப்பவன்!
சோலை மலர் விரிப்பவன்!
சுடரொளியை நிறைப்பவன்!

பாலையெனக் கொதிப்பவன்!
பாதங்கள் வறுப்பவன்!
வேலையிலாப் பொழுதிலும் 
வியர்வையிலே நனைப்பவன்!

மாலை அனல் தணிப்பவன்!
மஞ்சளுடை தரிப்பவன்!
வாழுமுயிர் அனைத்திற்கும் 
வைட்டமின் "டி' அளிப்பவன்!

ADVERTISEMENT

மேலை மலை முகட்டினில் 
மிளிர்ந்திருளில் குதிப்பவன்!
கோலநிலா முகத்தினில்
குளிரொளியைப் பதிப்பவன்!
தளவை இளங்குமரன்

Tags : Sun!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT